மனிதனுடைய வாழ்க்கை இந்த உலகத்தில் நிலையற்றது எப்போதும் வேண்டுமானாலும்
மரணம் என்பது நேரிடலாம். மரணத்துக்கு பிறகு ஒரு நித்தியமான அழிவில்லாத
வாழ்க்கை இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய பாவம் சாபங்கள்
இயேசுவின் இரத்தத்தால் கழுவி மன்னிக்கப்பட்டால் தான், நமக்கு பரலோக பாக்கியம்
கிடைக்கும்.இந்த பாக்கியத்தை பெறுவதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழி. நாம்
இயேசுவை விசுவாசித்தால் போதும், மரணத்துக்கு பிறகு உள்ள வாழ்க்கையை
குறித்து நிச்சயம் வந்துவிடும். மரணபயம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.